இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 02/10/2021
இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், II பேதுரு 1 : 5.
எப்பொழுதும் செயல்பட ஆயத்தமுள்ளவர்களாயிருப்தை ஜாக்கிரதையுள்ளவர்களாயிருப்பது என்று வேதம் கூறுகிறது. ஜாக்கிரதையுள்ளவர்களாயிருந்தால் உங்களுக்கு செல்வம், வெற்றி, அறிவு, நற்காரியங்கள் இவை எப்பொழுதும் உங்களுக்கு மேலுக்குமேல் சேர்ந்துக்கொண்டே இருக்கும். ஜாக்கிரதையுள்ளவனுக்கு எல்லாமே மேலும்மேலும் வந்து சேரும். ஒரே ஒரு நல்ல குணாதிசயம் மாத்திரம் இருந்தால் போதாது.
உதாரணத்துக்கு விசுவாசம் மாத்திரம் இருந்தால் போதாது, ஞானமும் தேவை பொருமை, சகோதர சினேகம் முதலியவையும் தேவை. எவ்வாறு இந்த நல்ல குணங்களை நாம் சேர்த்துக்கொள்வது?. நற்குணங்களை சேர்த்துக்கொள்வதற்கு எப்பொழுதும் செயல்படுவதற்கு ஆயத்தமாயிருப்பது. If you are diligent you will add. ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக பிரயோஜனமாய், நண்மையாய் ஏதாவது செய்தீர்களா என்று சிந்தியுங்கள்.
அறிக்கை: என் நற்குணங்களை நான் வளர்த்துக்கொள்வேன். சேர்த்துக்கொள்வேன் வேலை செய்வதற்கு எப்பொழுதும் ஆயத்தம் உள்ளவனாயிருப்பதால் நான் வளர்ந்து பெருகுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com