இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை 01/10/2021
விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்கிறவனில்லாமல் சண்டை அடங்கும். நீதிமொழிகள் 26:20
சோம்பேறியாயிருக்கிறவர்கள் ஈடுபடுகின்ற இன்னொரு காரியம் மற்றவர்களுடைய விஷயங்களைப் பேசுவதேயாகும். தோல்விகரமான அறிக்கை செய்வது தவறு. வெற்றிகரமான அறிக்கையே செய்யவேண்டும் என்பது நாம் அறிந்ததே. மற்றவர்களைக்குறித்து தவறானவிதமாய் பேசுவதும் தவறான அறிக்கையே. மற்றவர்களைக்குறித்து நீங்கள் கேள்விப்பட்ட தவறான காரியம் உண்மையானதாய் கூட இருக்கலாம். என்றாலும் அதைப்பேசாதீர்கள். நீங்கள் பேசுகிற காரியம் உண்மையானதாக இருந்தாலும் அது புகழானதா கற்புள்ளதா என்று சிந்தித்துப்பார்த்து பேசுங்கள்.( பிலிப்பியர் 4:8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவை களெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைக ளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.) யாரைப்பற்றி நீங்கள் அவதூறாய்ப் பேசுகிறீர்களோ அவர்களுக்காய் நீங்கள் ஜெபிப்பதில்லை. யாருக்காய் நீங்கள் ஜெபிக்கிறீர்களோ அவர்களைக்குறித்து நீங்கள் அவதூராய் பேசுவதும் இல்லை.
அறிக்கை: என் நேரத்தை நான் வீணான வார்ததைகளைப் பேசி வீணடிக்கமாட்டேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com