இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 30/09/2021
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான். அறுப்பிலே பிச்சை கேட்டாலும் அவனுக்கு ஒன்றுங் கிடையாது. நீதிமொழிகள் 20:4
வேலைசெய்வதற்கு சாக்குப்போக்கு சொல்வீர்கள் என்றால் நீங்கள் சோம்பேறி. சூழ்நிலை, காலநிலை இவற்றை எப்பொழுதும் காரணம் காட்டுகிறவன் சோம்பேறி. சூழ்நிலை, காலநிலை இவை நம்மை தடைசெய்வதும் உண்மைதான். ஆனால் ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு வருடத்தில் நடக்கும் அசம்பாவிதங்கள் எல்லாம் சோம்பேறியினுடைய வாழ்க்கையில் ஒரு மாதத்தில் நடந்துவிடுவது போல அவன் சாக்குபோக்கு சொல்லிக்கொள்வான். உங்கள் குறைவுகளுக்கு ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள் அதற்கு மிகமுக்கிய காரணம் நீங்கள் சோம்பேறி என்பதே. திருத்திக்கொள்ளுங்கள். ( இதுதான் உண்மை என்ன செய்ய……) இதுதான் வசனம் நமக்கு சொல்லுவது.
அறிக்கை: என்னை நானே நிதானித்து அறிந்து தவறுகளை திருத்திக்கொள்வேன். இதனால் வெற்றிப்பதையில் முன்னேறிச்செல்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com