இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லும் ஏழுபேரைப் பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். நீதிமொழிகள் 26:16
சோம்பேறியை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எப்பொழுதும் தன்னுடைய இழப்புகள் தவறுகள் இவற்றுக்கு மற்றவர்கள் மேல் பழிசுமத்துபவன் சோம்பேறி. உங்களுடைய தோல்விகள் இழப்புகள் தவறுகள் இவற்றுக்கு மற்றவர்கள் மேல் எப்பொழுதும் பழிசுமத்துவீர்கள் என்றால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டீர்கள். உங்கள் தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்கள் என்றால்தான் உங்களை நீங்கள் திருத்திக்கொள்ளமுடியும். சோம்பேறி மற்றவர்களை எல்லாவற்றுக்கும் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டு இருப்பான். உங்கள் தவறுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்கள் என்றால் உங்களை நீங்கள் திருத்திக்கொள்வீர்கள். உங்களை நீங்கள் திருத்திக்கொள்வதால் வெற்றியும் பெறுவீர்கள்.
அறிக்கை: என்னை நானே நிதானித்து அறிந்து தவறுகளை திருத்திக்கொள்வேன். இதனால் வெற்றிப்பதையில் முன்னேறிச்செல்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com