இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 27/09/2021
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். நீதிமொழிகள் 26:14
படுக்கையிலே படுத்துக்கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டுமென்று விரும்புகிறவன் சோம்பேறி. கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல அவன் படுக்கையில் ஆடிக்கொண்டிருப்பான். ஒன்றுமே செய்யாமல் தன் நேரத்தை வீணடிக்கிறவன் மாத்திரம் அல்லாமல் வீணான காரயத்தை பற்றி பேசிக்கொண்டும் பார்த்துக்கொண்டும் அவசியமற்ற காரியங்களை செய்துக்கொண்டும் இருப்பவனும் சோம்பேறியே. கதவு கீல்முளையில் ஆடினாலும் அது நகர்வதே இல்லை. அதேபோலத்தான் சோம்பேறியும் செயல்படுவதே இல்லை.
அறிக்கை: நான் வேலைசெய்ய மனதுள்ளவனாயிருப்பேன். நான் செய்வது எனக்கு வாய்க்கும் எனக்கு எதிராய்த்தோன்றும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com