இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 26/09/2021
“வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்”. நீதிமொழிகள் 26:13
வெற்றி வாழக்கைக்கு அவசியமான “வேலை செய்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கும் குணமே” Diligence என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இவ்வசனத்தை நம் தழிழ் வேதாகமத்தில் ஜாக்கிரதை உள்ளவர்களாய் இருத்தல் என்று வாசிக்கிறோம். சோம்பேறித்தனத்திற்கு மருந்து எப்பொழுதும் வேலை செய்வதற்கு முன் ஆயத்தமுள்ளவர்களாய் இருப்பதே. சோம்பேறியோ எப்பொழுதும் தான் ஏன் செயல்படவில்லை என்பதற்கான காரணத்தை சொல்லிக்கொண்டே இருப்பான். தனது தோல்விக்கும், தான் வேலை செய்யாதற்கும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டே இருப்பவன் சோம்பேறி. சோம்பேறியாய் இருப்பவனுடைய மிக முக்கியமான மோசமான எதிரிஅவனே. சோம்பேறி தனக்குத்தானே எதிரியாகிவிடுகிறான். சுறுசுறுப்பாய் செயல்படுவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறவர்கள் வெற்றிபெறுவார்கள். தேவன் உங்களுக்குக் கொடுத்த வாழ்நாளை சரியாய் செயல்படுத்தி அவருக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
அறிக்கை: நான் ஜாக்கிரதையுள்ளவனாய் என் நாட்களை செலவிடுவேன். ஆகையால் என் கை ஆளுகை செய்யும். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com