இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 18/09/2021
அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,8. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். நீதிமொழிகள் 6:7,8
தங்கள் வாழ்க்கையின் பிரச்சினையில் என்ன செய்வது என்பதை தேவனுடைய பிள்ளைகள் பலரும் அறிந்திருப்பதில்லை. மனிதர்களிடத்தில் ஆலோசனைக்காக ஓடுகிறார்கள். ஒரு எறும்பு எவ்வாறு கோடைக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் தனது உணவை சேர்த்துவைக்கிறதோ அதைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற விசுவாசியும் செயல்பட வேண்டும்.
எந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆவியில் உங்களுக்கு தேவன் தெரியப்படுத்துவார். ஒன்று செய்யவேண்டும் என்ற என்பதை உங்களுக்கு தேவன் தெரியப்படுத்துவார் அல்லது ஒன்றை செய்யக்கூடாது என்ற தடை உணர்வை உங்கள் இருதயத்தில் தெரியப்படுத்துவார். பலரும் தேவ ஆவியால் நடத்தப்படுவதற்கு இடம் கொடுக்காததற்கு காரணம் என்னவென்றால் தங்கள் செயல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்கத்தயங்குவதே காரணம் ஆகும். எவர்கள் தேவனுடைய ஆவியால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரர். புத்திரர் என்பது வளர்ந்த பிள்ளைகளைச் சொல்லுகிறது. நீங்கள் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படவில்லையென்றால்; நீங்கள் வளரவில்லை என்று அர்த்தம்.
அறிக்கை: நான் எனக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவேன். அவரே என்னை எல்லா சத்தியததுக்குள்ளும் வழி நடத்துவார். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com