இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 17/09/2021
சோம்பேரியே நீ எறும்பினிடத்தில் போய் அதின் வழிகளைப் பார்த்து ஞானத்தை கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும் நீதிமொழிகள் 6:6,7
எறும்பினிடத்தில் ஞானத்தைக் கற்றுக்கொள்ள ஞானி சொல்லுகிறார். தேவனுடைய படைப்பு தேவன் ஒருவர் உண்டு என்பதைக்காட்டுகிறது. வேதாகமம் இல்லையென்றாலும் அவருடைய சிருஷ்டிப்பின் மூலமாய் தேவனை நாம் கண்டுகொள்ள முடியும். (ரோமர் 1:18-19) இயற்கையினால் ஞானத்தைப் பெறமுடியாது. ஆனால் இயற்கையின் மூலமாய் நாம் ஞானத்தைப் பெறமுடியும். தேவனுடைய வல்லமையையும் மகத்துவத்தையும் இயற்கையில் கண்டு ஞானத்தை பெற முடியும்.
எறும்பு தனக்கு தலைவன் இல்லாமலேயே அது செயல்படுகிறது. எறும்பு இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிற்ளைகளுக்கு அடையாளம். எவர்கள் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறார்களோ அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் என்று வேதம் கூறுகிறது. உங்களை வழிநடத்தக்கூடிய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குஉள்ளேயே இருக்கிறார். எறும்பு எதை எப்பொழுது செய்யவேண்டும் என்பதை அறிந்து இருக்கறது போல நீங்களும் அறிந்துகொள்ள முடியும்.
அறிக்கை: நான் எனக்குள் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவேன். அவரே என்னை எல்லா சத்தியததுக்குள்ளும் வழி நடத்துவார். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com