இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 12/09/2021
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; எபேசியர் 3: 18.
கிறிஸ்துவின் அன்பின் அகலம், நீளம் மாத்திரம் அல்ல ஆழத்தையும், உயரத்தையும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்று பவுல் ஜெபிக்கிறார். உயரம் என்பது உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள உறவையும் ஆழம் என்பது மற்றவர்களோடு உங்களுக்கு இருக்கும் உறவையும் குறிப்பிடுகிறது. .லூக்கா10: 27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான் என்று கூறுகிறது.
இவ்விரண்டு கட்டளைகள் நமக்கு புதிய உடன்படிக்கையாக கொடுக்கப்பட்டிருக்கிற கற்பனைகள். உறவுகளைக்குறித்த அறிவில் நீங்கள் வளரவேண்டும். பத்து கற்பனைகளும் இதிலே அடங்கியிருக்கின்றன.
சகோதரனை நேசித்தால் அவனுக்கு விரோதமாக செயல்பட மாட்டீர்கள், திருட மாட்டீர்கள், அவனுக்கு உரியதை இச்சிக்கமாட்டீர்கள், தேவனை நேசித்தால் பாவமும் செய்ய மாட்டீர்கள், பாவம் செய்யாமலிருப்பதற்கு மற்றவர்கள் பார்த்து விடுவார்களே என்பது காரணமாயிருக்குமானால் இதை இரகசியமாய் செய்ய ஆரம்பத்து விடுவீர்கள். தேவனிடத்தில் அன்பு கூறுவதால் அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களாய் இருக்கிறோம்.
அறிக்கை: முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும் நான் தேவனிடத்தில் அன்பு கூறுவேன். என்னிடத்தில் அன்பு கூறுவது போல என் சகோதரரிடத்திலும் நான் அன்பு கூறுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com