இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை 10/09/2021
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; எபேசியர் 3: 18.
கிறிஸ்துவினுடைய அன்பின் அகலத்தை மாத்திரம் அல்ல நீளத்தையும் நீங்கள் அறிந்துகொள்வேண்டும். அதாவது வேதாகமத்தின் காலங்கள் எப்படியாயிருக்கின்றன. நாம் எந்த காலத்தில் வாழ்கிறோம். எப்படி அதற்கேற்றபடி நாம் நடக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். ஏழு காலங்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்து.
1 அறியாமையின் காலம் – அது ஆதாமின் காலத்தோடு முடிந்தது
2 மனசாட்சியின் காலம் – அது நோவாவின் ஜலப்பிரலயத்தோடு முடிந்தது
3 மனித அரசின் காலம் – அது பாபேல் கோபுரத்தோடு முடிந்தது
4 வாக்குத்தத்தத்தின் காலம் – அது ஆபிரகாமிலிருந்து ஆரம்பித்து எகிப்திய அடிமைத்தனத்தோடு முடிவடைந்தது.
5 நியாயப்பிரமானத்தின் காலம் – அது மோசேயிலிருந்து ஆரம்பித்து இயேசு கிறிஸ்துவின் உயிரத்தெழுதலோடு முடிவடைந்தது.
6 கிருபையின் காலம் – அது பெந்தெகோஸ்தே நாள் அன்று ஆரம்பித்து இயேசுவின் வருகையோடு முடியப்போகிறது.
7 ஆயிரவருட அரசாட்சியின் காலம் – புதிய வானம் புதிய பூமி என்ற நித்திய காலம்.
இப்பொழுது நாம் கிருபையின் காலம் என்கிற சபையின் காலத்தில் வாழந்து கொண்டிருக்கிறோம். வேதத்தில் நிருபங்கள் நமது காலத்திற்கு எழுதப்பட்டவை; நிருபங்களை வாசிக்க அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
அறிக்கை: நான் கிறிஸ்துவின் அன்பைக்குறித்து அறிகிற அறிவிலே வளருவேன். அவரைக் குறித்து அறிகிற அறிவினால் ஜீவனுக்கும் தேவ பக்திக்குமான யாவற்றையும் நான் பெற்றுக்கொள்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com