இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 09/09/2021
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; எபேசியர் 3: 18.
கிறிஸ்துவினுடைய அன்பின் அகலத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அகலம் என்பது வேதத்திலுள்ள எல்லா கருத்துக்களையும் அறிந்து தேறுவது. உதாரணமாக நீங்கள் விசுவாசத்தில் மாத்திரம் வளர்ந்தால் போதாது. ஜெப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கவேண்டும். ஜெபம் மாத்திரமும் போதாது. ஸ்தோத்திரத்திலும் பெருக வேண்டும். பரிசுத்த வாழ்க்கையிலும் வளரவேண்டும். விசுவாச அறிக்கையும் அவசியம். எனவே கிறிஸ்தவ வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நீங்கள் வளர வேண்டும். பரலோக இராட்சியத்தின் திரவுகோல்களை உனக்குத் தருவேன் என்று ஆண்டவர் பன்மையில் சொன்னார். ஒரு சாவியைமாத்திரம் வைத்து திறக்கமுடியாது. சாவிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லா அம்சங்களிலும் வளர ஆண்டவரின் அன்பைக்குறித்து அறிகிற அறிவின் அகலத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
அறிக்கை: கிறிஸ்துவின் அளவிடமுடியாத அன்பை நான் அறிந்துகொள்வேன். கிறிஸ்தவ வாழக்கையின் எல்லா அம்சங்களிலும் நான் வளர்ந்து தேறுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com