இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 08/09/2021
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி. எபேசியர் 3:17.
விசுவாசம் கிரியை செய்ய அன்பும் தேவை என்று பார்த்தோம். விசுவாசத்திற்கு எதிரான வல்லமை பயம். பயம் இருந்தால் உங்களுக்கு விசுவாசம் இருக்காது. வீசுவாசம் இருந்தால் பயம் இருக்காது. அப்படியென்றால் பயம் இல்லாதிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?. I யோவான் 4:18அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. என்று கூறுகிறது.
அன்பு இருந்தால் பயம் இல்லை பயம் இல்லாவிட்டால் விசுவாசம் உண்டு.
அறிக்கை: நான் பூரண அன்பில் நிலைத்திருப்பதால் எனக்கு பயம் இல்லை. பயம் என்னை அணுகாது. ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com