இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 07/09/2021
விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி. எபேசியர் 3:17.
அன்பிலே வேரூன்றி நிலைபெற வேண்டுமென்று பவுல் எபேசு சபையாருக்காக ஜெபிக்கிறார். விசுவாசம் இருந்தால் மாத்திரம் போதாது அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும் என்று வேதம் கூறுகிறது. அன்பிலே நீங்கள் நடக்காவிட்டால் உங்கள் விசுவாசம் உங்களுக்கு பலன் தராது. இந்த தெய்வீக அன்பு உங்கள் இருதயத்தில் ஊற்றப்பட்டிருக்கிறது (ரோமர் 5:5). தெய்வீக அன்பு என்றால்என்ன? நேசிப்பதற்கு தகுதியற்றவர்களை நேசிப்பது தெய்வீக அன்பு. இந்த அனபிலே நீங்கள் வேரூன்றி நிலைபெறவேண்டும். ஞானம் இருப்பதும் இருதயத்தில் தான். விசுவாசம் இருப்பதும் இருதயத்தில்தான். அன்பு இருப்பதும் இருதயத்தில் தான்.
அறிக்கை: நான் தெய்வீக அன்பிலே வேரூன்றி நிலைபெறுவேன். என் சத்துருக்களையும் நேசிப்பேன் அவர்களுக்கு நன்மைசெய்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com