இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 04/09/2021
நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், எபேசியர் 3: 16.
பவுல் எபேசு சபையாருக்காக தொடர்ந்து ஜெபிக்கும்போது உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவேண்டும் என்று ஜெபிக்கிறார். உள்ளான மனுஷன் என்பது உங்கள் ஆவியைக்குறிக்கிறது. நமது வல்லமை நமது சரீரத்திலே இல்லை. நமது மனமும் நமது சரீரமும் சொல்லுகிறபடி அல்லாமல் நமது உள்ளான மனுஷனுக்கு ஏற்றபடியே நாம் நடந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் பரிசுத்தாவியானவர் உங்கள் ஆவியில் உள்ளான மனுஷனில்தான் வாசமாயிருக்கிறார். நாம் கோபப்படும்போது கோபப்படவேண்டாம் என்று உனர்த்துவது உங்கள் உள்ளான மனுஷன் நீங்கள் அந்த குரலுக்குத்தான் கீழ்ப்படியவேண்டும்.
உள்ளான மனுஷனில் பலப்பட்டால் உங்கள் உள்ளத்தையும் உங்கள் மனதையும் உங்கள் உள்ளான மனுஷனுக்கு நீங்கள் கீழ்ப்படுத்தமுடியும். உள்ளான மனுஷனில் பலப்பட நீங்கள் வேதவசனத்தை தியானியுங்கள். ஞானம் என்பது உங்கள் மனதிலோ, உங்கள் சரீரத்திலோ இருப்பது இல்லை மாறாக அது உங்கள் ஆவியில் இருப்பது அங்கேதான் நீங்கள் பலப்படவேண்டும்.
அறிக்கை: நான் கர்த்தருடைய வார்த்தையை நேசிக்கிறேன். அவருடைய வார்த்தைகளாலே நான் என் உள்ளான மனுஷனில் பலப்படுவென். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com