இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 03/09/2021
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8: 11.
இந்தவசனம் உயிர்த்தெழுதலை குறித்து சொல்லவில்லை. தேவனுடைய ஆவி நீங்கள் உயிரோடிருக்கும்போதல்லவா உங்களுக்குள் வாசமாய் இருக்கிறது. சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரங்களை அந்த பரிசுத்த ஆவயானவர் உயிர்ப்பிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர செத்துப்போன சரீரத்தை உயிர்ப்பிப்பார் என்று சொல்லப்படவில்லை. இந்தவசனம் தெய்வீக ஆரோக்கியத்தை உங்களுக்கு வாக்களிக்கிறது. இயேசு கிறிஸ்துவை உயிரோடே எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருப்பதால் உங்கள் சரீரத்தை வியாதிகள் தாக்காதவாறு உயிர்ப்பிப்பார்.
அறிக்கை: இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடே எழுப்பினவருடைய ஆவி என்னில்; வாசமாயிருப்பதால் சாவுக்கு ஏதுவான என் சரீரத்தை அவர் உயிர்ப்பிப்பார். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com