இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 30/08/2021
தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; எபேசியர் 1:18.
தேவனைக்குறித்து அறிகிற அறிவிலும் ஞானத்திலும் வளர மூன்று காரியங்களை நீங்கள் அறிய வேண்டும். இதில் ஒன்று இறந்த காலத்தில் இன்னொன்று நிகழ்காலத்தில் இன்னொன்று எதிர்காலத்தையும் சேர்ந்தது. 1 உங்களுக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை. (எதிர்காலம்) 2 பரிசுத்தவான்களாகிய உங்களுக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் (நிகழ்காலம்). 3 உயித்தெழுதலை நடப்பித்த வல்லமையின் மகத்துவம். (இறந்தகாலம்).
நம்முடைய நம்பிக்கை என்ன? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சபையை அரவணைக்க மீண்டுமாய் வருகிறார் என்பதுதான் நமது மாபெரும் நம்பிக்கை. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் கிறிஸ்துவுக்குள் ஜீவிக்கிறவவர்களும் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையிலே இமைப்பொழுதிலே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். இதுதான் சபையினுடைய நம்பிக்கை. உலகத்தாருக்கு இல்லாத மாபெரும் நம்பிக்கை. விலைவாசி, பூமி அதிர்ச்சிகள், கொள்ளை நோய்கள், பஞ்சம் இவையெல்லாம் பெருகினாலும் நாம் தலையை உயர்த்தி நடக்கவேண்டிய காலம் இது.
அறிக்கை:
இயேசுக்கிறிஸ்து தாம் இருக்கிற இடத்தில் என்னை சேர்த்துக்கொள்வார் என்ற மாபெரும் நம்பிக்கையினாலேயே என்னை நான் தேற்றிக்கொள்வேன். இம் மாபெரும் நம்பிக்கையை குறித்து அறிகிற அறிவினால் நான் நிறப்பப்படுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com