இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 28/08/2021
2 பேதுரு 1: 3. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி.
ஜீவனுக்கும் தேவ பக்திக்குமான யாவற்றையும் நமக்கு தேவனுடைய வல்லமை அளித்திருக்கிறது. நாம் அவற்றை பெற்றுக்கொள்வது என்றால்? தேவனைக்குறித்து அறிகிற அறிவினாலேயே; தேவன் என்ன ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார். அவற்றை எப்படி பெற்றுக்கொள்வது? என்பதை எல்லாம் அவர் தமது வார்த்தையிலேவிளக்கி இருக்கிறார். அதை அறிந்துகொள்ளாததினாலேயே பலரும்
ஆசீர்வதிக்கப்படுவதில்லை. தங்கள் ஆசீர்வாதங்களை பெறாததற்கு காரணம் இன்னும் தேவன் தங்களை ஆசீர்வதிக்காததினாலேயே என்று பலரும் நினைக்கின்றனர். மாறாக தேவன் ஆசீர்வித்துவிட்டார். அவைகளை இன்னும் பெற்றுக்கொள்ள அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. உங்கள் வங்கியில் உங்கள் கணக்கில் ஒருவர் உங்களுக்கு பணம் செலுத்திவ்ட்டாலும். அதை நீங்கள் எடுத்தால்தான் உங்களுக்கு பிரயோஜனமாயிருக்கும். வங்கியில் பணம் எடுக்க தெரியாவிட்டால் உங்களுக்கு பிரயோஜனமில்லை. தேவன் ஜீவனுக்கும் தேவ பக்திக்குமான யாவற்றையும் நமக்கு தந்திருக்கிறார். இந்த ஆசிர்வாதங்கள் எல்லாம் எதனால் நமக்கு கிடைக்கிறது? அடுத்த வசனத்தில் ( மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.) மகா மேன்னையான வாக்குத்தத்தங்களினாலேயே என்று சொல்லப்பட்டடிருக்கிறது.
அறிக்கை:
நான் தேவனைக்குறித்து அறிகிற அறிவை அவருடைய வார்த்தையிலிருந்து பெற்றுக்கொள்வேன். இதனால் அவருடைய ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com