இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை – 26/08/2021
நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். பிலிப்பியர் 3:12
Action gives further vision
செயல்படுவது தொடர்ந்து தரிசனத்தை அளிக்கும்.
பயணம் செல்லச்செல்ல பாதையானது தொடர்ந்துகொண்டே இருக்கும். பயணத்தை ஆரம்பிக்காதவரை பார்வைக்குத் தெரிவது ஒன்றாகவே இருக்கும். பயணம் தொடர பார்வையும் தொடர்ந்து செல்லும். கிடைத்த தரிசனத்திற்கு செயல்பட்டால் அடுத்த தரிசனம் கிடைக்கும். “ பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி நீ எழுந்து வனாந்திர மார்க்கமாய்ப்போ என்றான். என்று அப்போஸ்தலர் 8:26 ல் வாசிக்கின்றோம். போன உடனே பிலிப்பு இரதத்தைக்கண்டார். எத்தியோப்பிய மந்தரியை இரட்சிப்புக்குள் வழிநடத்தினார்.
நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் தொடர்ந்து தரிசனத்தைப் பெறுவீர்கள்.
அறிக்கை:
கர்த்தர் எனக்குத் தந்த தரிசனத்திற்கு நான் கீழ்ப்படிய மேலும் தரிசனங்களை அவர் எனக்குத்தருவார்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com