இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வியாழக்கிழமை 12/08/2021
நானே உன் பரிகாரியான கர்த்தர் என்றார். யாத்திராகமம் 15:26
“What you do to the problem is more important than
what the problem is doing to you”
பிரச்சினை உங்களுக்கு என்ன செய்கிறது? என்பதை விட பிரச்சினைகளுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதே அவசியமானது.
பிரச்சினை நேரத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே முக்கியமானது. வியாதி உங்களுக்கு என்ன செய்கிறது என்பதை விட வியாதிக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? வியாதி நீங்கி விட்டது என்ற அறிக்கையை செய்யுங்கள். 91ம் சங்கீதத்தை ஒரு சில முறை அதாவது ஐந்து அல்லது ஆறு முறை சொல்லுங்கள். (அறிக்கை செய்யுங்கள்). வறுமை, வியாதி, கடன் பிரச்சினை உங்களுக்கு என்ன செய்கிறது என்பதையே சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். அதற்கு பதிலாக இவற்றைக்குறித்து பரிசுத்த வேதாகமம் என்ன சொல்லுகிறதோ அதையே சொல்லிப்பழகுங்கள்.
அறிக்கை:
கர்த்தர் என்னை நீடித்த நாட்காளால் திருப்தியாக்குவார் கழுகுக்குச் சமானமாய் என்
வயது வாலவயதுபோலாகும்
ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com