இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை 11/08/2021
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. நீதிமொழிகள் 25:2
“Every adversity his a possibility”
எந்தச் சோதனையிலும் வெற்றி ஒன்று மறைந்திருக்கிறது.
சோதனையிலும் துன்பத்திலும் மறைந்திருக்கிற வெற்றியை தேவன் நாம் அறிந்துகொள்ளும்படி வெளிக்காட்டுவதில்லை. ஏன்? காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை. வெற்றிக்காக துன்பமில்லை. துன்பம் வரும்போது அதன்பின்னே வெற்றி ஒன்று மறைந்திருக்கிறது. எனவே நாம் துன்பத்தை எதிர்ப்பார்க்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம் விசுவாசத்தைப் செயல்படுத்தி துன்பத்தை ஜெயித்து அதன் பின்னே மறைந்திருக்கிற வெற்றியைப் பெற்றுக்கொள்ளவே தேவன் காரியத்தை நமக்கு மறைக்கிறார்.
அறிக்கை:
எனக்கு நேரிடுகிற எந்த துன்பத்தைக்கண்டும் நான் பயப்படமாட்டேன். அதற்குபின்னே மறைந்திருக்கிற வெற்றியைக்கண்டு துன்பத்தை நான் தைரியமாய் எதிர் நோக்குவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com