இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
வெள்ளிக்கிழமை – 06/08/2021
அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். சங்கீதம் 78:41
Don’t limit God. Have unlimited success and prosperity.
தேவனை மட்டுப்படுத்தாதீர்கள். கட்டுக்கடங்காத வெற்றியையும் செல்வத்தையும் பெறுங்கள்.
வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆய்த்தப்படுத்தக்கூடுமோ? என்று இஸ்ரவேலர் நினைத்தபோது தேவனை மட்டுப்படுத்தினார்கள். கர்த்தரோ மன்னாவையும், காடைகளையும் தந்தார்.
தேவனால் என் கனவை நிறைவேற்றமுடியுமா? என் ஜெபத்திற்கு பதில் கிடைக்குமா? என்று நீங்கள் நினைக்கும்போது தேவனை கட்டுப்படுத்துகிறீர்கள். உங்கள் கனவினாலே தேவனை மட்டுப்படுத்தாதீர்கள். உங்கள் தேவன் எவ்வளவு பெரியவரோ அவ்வளவுபெரிதாய் கனவுகாணுங்கள்.
அறிக்கை:
என் கனவினாலேயோ என் நினைவினாலேயோ என் தேவனை நான் மட்டுப்படுத்தமாட்டேன். தேவன் என்கனவை நிறைவேற்றக்கூடிய அளவிற்கு பெரியவர். அவர் என் கனவை நிறைவேற்றுவார்.ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com