இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 04/08/2021
என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். மத்தேயு 4:19
“Will is more important then skill”
திறமையைவிட தீர்மானமே முக்கியமானது.
எந்த காரியத்தையும் செய்ய உங்களுக்கு திறமையிருக்கிறதா? என்பதைவிட அதை நிறைவேற்ற தீர்மானித்திருக்கிறீர்களா? என்பதே முக்கியமானது. மீன்பிடிக்கிறவர்களுக்கு மனிதரைப்பிடிக்கும் திறமை உண்டா? உலகைக்கலக்குகின்ற வேதத்தை எழுதும் திறமை மீன்பிடித்த இயேசுவின் சீடர்களுக்கு உண்டா? இயேசு திறமையை கேட்கவில்லை; என்பின்னே வருகிறீர்களா? என்றே கேட்டார். கனவை நிறைவேற்ற திறமை உண்டா? என்பது கேள்வி அல்ல. தீர்மானம் உண்டா? என்பதே கேள்வி.
நீங்கள் தீர்மானித்து செயல்பட்டால் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள்.
அறிக்கை:
நான் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய தீர்மானிக்கிறேன். எனவே கீழ்ப்படிய தீர்மானித்திருக்கிற நான் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வேன்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com