இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
புதன்கிழமை – 28/07/2021
அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 17: 20
Nothing shall be impossible unto you
உங்களால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
செய்யமுடியாத காரியங்களைச் செய்து தேர்ச்சி பெறுங்கள். ஏனென்றால் உங்களால் முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை என்று நமது ஆண்டவர் கூறுகிறார். ஆண்டவர் எப்பொழுதும் தவறு செய்வதில்லை. அவர் சொன்னால் அது சரியானதாகவே இருக்கும். இயேசு சொன்னார் உங்களால் செய்ய முடியும் என்று. ஆகவே நீங்கள் செய்யுங்கள்.
அறிக்கை:
என் தேவன் என்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆகவே என்னால் முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை. நான் செய்யமுடியாத காரியங்களைச் செய்து தேர்ச்சி பெறுவேன். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com