இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 24/07/2021
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர்உன்னோடே இருக்கிறார் என்றார். யோசுவா 1:9
Stop fear before fear stops you
பயம் உங்களை நிறுத்துமுன் பயத்தை நீங்கள் நிறுத்துங்கள்.
தோற்றுப்போய்விடுவோமோ என்று பயந்து பலரும் செயல்படுவதேயில்லை. கர்த்தர் பயப்படாமல் இருங்கள் என்றார். பயத்தை நிறுத்த இயேசுவின் நாமத்தை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார் தோல்வியை விட பயமே மிகவும் அருவறுக்கத்தக்கது. பயமே இயேசுவின் நாமத்தில் என்னைவிட்டுப்போ என்று சொல்லுங்கள். தேவன் நமக்கு பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையும் தந்திருக்கிறார். ஆகவே பயத்தை நிறுத்துங்கள்.
அறிக்கை:
நான் பயம் இல்லாது இருப்பேன். கர்த்தர் எனக்கு சகாயர் அவரே என் காரியத்தை எனக்கு வாய்க்கப்பண்ணுவார்.
ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com