இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 18/07/2021
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. யாத்திராகமம் 14:15
Begin to Win
வெற்றிபெற ஆரம்பியுங்கள்
உங்கள் பிரச்சினைகளை வெல்லவோ உங்கள் தரிசனங்களை நிறைவேற்றவோ சாதனைகளை புரியவோ அந்த செயலை ஆரம்பிக்கும் முன் எல்லாதடைகளும் நீங்கின பிறகு தான் செயல்படுவேன் என்று காத்திருக்காதீர்கள். சிவந்த சமுத்திரம் பிரிந்த பிறகு ஆண்டவர் அவர்களை புறப்படச் சொல்லவில்லை சமுத்திரம் பிரியும் முன்பே புறப்படச் சொன்னார். அவர்கள் புறப்பட ஆயத்தமானதிளால் சிவந்த சமுத்திரம் பிரிந்தது. சமுத்திரம் பிரிந்தால் தான் நாங்கள் புறப்படுவோம் என்று அவர்கள் சொல்லியிருந்தால் சிவந்தசமுத்திரக் கரையிலேயே இஸ்ரவேலர் நின்றிருப்பார்கள்.
அறிக்கை:
நான் செய்வதை கர்த்தர் எனக்கு வாய்க்கப்பண்ணுவார். ஆரம்பிப்பேன் தொடருவேன் வெற்றி பெறுவேன். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com