இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
சனிக்கிழமை – 17/07/2021
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். யோசுவா 1:3
Start it, be at it, until you get it.
தொடங்கு, செயல்படு, கிடைக்கும்வரை நிலைத்திரு.
ஆரம்பியுங்கள்; பெற்றுக்கொள்ளும்வரை செயல்படுங்கள். கால்படும் தேசத்தை கர்த்தர் யோசுவாவிற்கு தருவேன் என்றார். அது தொடர்ந்து நடப்பதைக்குறிக்கின்றது. எந்தகாரியத்திலும் வெற்றிபெற ஆரம்பிக்க வேண்டும் தொடர்ந்து செயல்பட வேண்டும். சாதனைபுரியும் வரை செயல்படுவதே விடாமுயற்ச்சி. கானானை சுதந்தரிக்க ஒரு காலடியுடன் ஆரம்பித்தார்; தொடர்ந்து கானான் சுதந்தரிக்கப்படும்வரை தொடருகிறது. விடாமுயற்ச்சியோடு செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
அறிக்கை:
நான் செய்வதை கர்த்தர் எனக்கு வாய்க்கப்பண்ணுவார். ஆரம்பிப்பேன் தொடருவேன் வெற்றி பெறுவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com