இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 13/07/2021
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். யோசுவா 1: 3
Winning starts with beginning
வெற்றி ஆரம்பிப்பதில் ஆரம்பிக்கிறது.
யோசுவா சுதந்தரிக்க வேண்டிய தேசம் மிகவும் விஸ்தாரமான தேசம். அவ்வளவு பெரிய தேசத்தை எவ்வாறு சுதந்தரிப்பது? கால்படும் தேசம் எப்படி சொந்தமாகும்?. கால்படுவது என்பது ஒரு காலடியைக்குறிக்கிறது. ஒவ்வொரு காலடியாக தேசம் முழுவதையும் சுதந்தரித்துவிடலாம் எவ்வளவு பெரிய வேலையையும் முதலில் ஆரம்பித்து பிறகு ஒவ்வொன்றாக செயல்படுத்தி முடித்துவிடலாம்.
அந்த நீண்ட நெடிய பயணமும் முதல் அடி எடுத்து வைத்தவுடன்தான் ஆரம்பமானது. ஒருநாளைக்கு நான்கு அதிகாரங்கள் படித்தால் ஒரு வருடத்தில் முழுவேதாகமத்தையும் ஒருமுறை வாசித்துவிடலாம். ஜாஜ்முள்ளர் என்ற தேவமனிதர் முழங்காலில் நின்று 100 முறை பரிசுத்த வேதாகமத்தை படித்து முடித்தாராம். கென்னத் ஏகின் 150 முறை புதிய ஏற்பாட்டை வாசித்துமுடித்தாராம். நீங்களும் முதல் அடி எடுத்துவையுங்கள்.
அறிக்கை:
கர்த்தர் நான் செய்யும் கார்யங்கள் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுவார். என் தரிசனம் நிறைவேற முதல்படியை நான் முதலில் செயல்படுத்துவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com