இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 12/07/2021
என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். யோசுவா 1: 2
Wining starts with beginning
வெற்றி ஆரம்பிப்பதில் ஆரம்பிக்கிறது.
உங்கள் தரிசனம் நிறைவேற முதலில் நீங்கள் செயல்பட ஆரம்பியுங்கள். உங்கள் தரிசனம் உங்கள் சபையைக்குறித்ததாய் இருக்கலாம் அல்லது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைக்குறித்ததாயிருக்கலாம். மோசே, யோசுவா, தானியேல் ஆகியோர் தம் மக்களுக்காக தரிசனம் கண்டனர். தரிசனம் கிடைத்த உடன் அதை செயல்படுத்த முதல் படியை செய்ய ஆரம்பித்தார்கள். 40 வருடம் வனாந்திரத்திலிருந்த இஸ்ரவேலரை கர்த்தர் கானான் தேசத்தை சுதந்தரிக்கும்படி புறப்படச்சொல்லுகிறார். உங்கள் தரிசனம் நிறைவேற முதல் படியை முதலில் செயல்படுத்துங்கள்.
அறிக்கை:
கர்த்தர் நான் செய்யும் காரியங்கள் எல்லாவற்றையும் வாய்க்கப்பண்ணுவார். என் தரிசனம் நிறைவேற முதல்படியை நான் முதலில் செயல்படுத்துவேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com