இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 11/07/2021
பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். பிலிப்பியர் 4:22
அரண்மனையில் உள்ளவர்களும் பிலிப்பு சபையாருக்கு வாழ்த்து சொன்னார்கள். எதனால்? அரண்மனையில் உள்ளவர்களும் பவுலின் ஊழியத்தினால் விசுவாசிகளாக மாறிவிட்டதினால் பிலிப்பு சபையாருக்கு அவர்கள் வாழ்த்துச் சொன்னார்கள். பவுல் சிறைச்சாலையிலும் கர்த்தருக்கு சாட்சியாய் மனம் வீசினதினால் சிறைச்சாலையில் இருந்தவர்களும் விசுவாசிகளாய் மாறினார்கள். ஆகையினால் பவுலின் நிருபத்தில் அவர்களும் பிலிப்பியர்களுக்கு வாழ்த்து சொல்வதாக கூறி நிருபத்தை பவுல் முடிக்கிறார். எந்த நிலையிலும் மனம் வீசினால் கர்த்தர் உங்களை எந்த நிலையிலும் பயன்படுத்துவார்.
அறிக்கை:
நான் எந்த நிலையிலும் மனரம்யமாயிருப்பேன். அவருக்கென்று நற்கந்தமாய் மணம் வீசுவேன். ஆமென்
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com