இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
செவ்வாய்க்கிழமை – 06/07/2021
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலிப்பியர் 2: 13
Desire is your Empire.
உங்கள் விருப்பமே உங்கள் சாம்ராஜ்யம்.
தேவன் உங்கள் ஆவியில்; இருதயத்தில் இருக்கிறார். எனவே அவர் உங்களோடு பேச வேண்டும் என்றால் உங்கள் இருதயத்தில் தான் பேசுவார். தேவன் தமது தரிசனத்தை உங்கள் இருதயத்தில் வெளிப்படுத்துவார். உங்கள் இருதயத்தில் உண்டாகும் விருப்பமே நீங்கள் வாழவேண்டிய உங்கள் சாம்ராஜ்யம். அதற்காய் காத்திருங்கள். அதை தெரிந்துகொள்ள கர்த்தருடைய சமுகத்தில் காத்திருங்கள்.
தரிசனத்தைப் பொற்றுக்கொண்டால் நீங்கள் வாழுவீர்கள். அப்படி தரிசனத்தைப் பெற்றுக்கொண்ட உடன் உங்கள் முழுபெலனையும், திறனையும் கொடுத்து அதை நிறைவேற்ற செயல்படுங்கள்.
அறிக்கை:-
தேவன் எனக்குத் தந்த தரிசனத்தை நிறைவேற்ற என் முழுபெலத்தையும் நான் பயன்படுத்துவேன். தரிசனத்தை எனக்கு அளித்தவர் என்னை அழைத்தவர். அவர்அவரே என் கனவை நனவாக்குவார். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com