இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 28/06/2021
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21. சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். எபேசியர் 3:20, 21
Dare to dream
கனவு காணத் துனியுங்கள்
உங்களால் தோல்விகரமான காரியங்களை கற்பனைகளை செய்ய முடியும் என்றால்; வெற்றிகரமான காரியங்களையும் உங்களால் கற்பனை செய்ய முடியும். உங்கள் கற்பனை சக்தியை பயன்படுத்தியே தரிசனத்தை தேவன் உங்களுக்கு அளிக்கிறார். எதிர்காலத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்களாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…… அதை உங்களுக்கு கர்த்தர் தருவார்.
நான் நினைத்தது எல்லாம் எனக்கு கிடைத்துவிடுமா? என்று கேள்வி கேட்கிறீர்களா? நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாய் கிரியைசெய்கின்ற ஆண்டவர் உங்களுக்கு இருக்கிறார்.
ஒன்றுமே கிரியை செய்யவில்லையென்றால் தேவன் அதற்கு மேலாக கிரியை செய்வது எப்படி? உங்கள் கற்பனைசக்தியே உங்கள் வாழ்க்கையைக்குறித்த கனவுகள் உறுவாவதற்கான இடம். இந்த 2021 ம் வருடம் என்ன செய்யப்போகிறீர்கள்? என்று கனவுகானத்துணியுங்கள். வெற்றிபெறுவீர்கள்.
அறிக்கை:
நான் வேண்டிக்கொள்வதந்கும் நினைப்பதற்கும் அதிகமாய்கர்த்தர் என் காரியங்கள் யாவற்றையும் வாய்க்கப்பண்ணுவார். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com