இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
ஞாயிற்றுக்கிழமை – 27/06/2021
அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான்.
2 சாமுவேல் 17:36
Look forward: Look Backward
பின்னோக்குங்கள்: முன்னோக்குங்கள்
தேவன் மனிதனுக்கு இரண்டு விதமான சக்தியைக் (ஆற்றல்) கொடுத்து இருக்கிறார். 1 கற்பனை சக்தி 2 ஞாபக சக்தி. ஆண்டவரின் கடந்தகால வழி நடத்துதல்களை நினைவுக்கு கொண்டுவர உதவுவது ஞாபக சக்தி. தற்கால சாதனைகளை செய்ய சோதனைகளை மேற்கொள்ள உதவுவது கற்பனை சக்தி.
தாவீது கோலியாத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தபோது அப்படித்தான் செய்தார். வெற்றியுள்ள வாழ்க்கை வாழ 1 பின் நோக்கிப்பாருங்கள் (தேவன் இஸ்ரவேலருக்குச் செய்த காரியங்கள்) 2 முன் நோக்கிப்பாருங்கள் (தேவன் உங்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்)
அறிக்கை:
கடந்த நாட்களில் எனக்கு ஏற்பட்ட சோதனைககளில் எல்லாம் என்னை பத்திரமாய் தப்புவித்த என் தேவன் இப்பொழுதும் தப்புவிப்பார், காத்துக்கொள்வார்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com