இன்றைய நாளுக்கான “வாழ்வளிக்கும் வார்த்தை”
திங்கள்கிழமை – 21/06/2021
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். மத்தேயு 7:26.
இரண்டுவிதமான மனிதர்களைளக் குறித்து இயேசு கூறுகிறார். இருவருமே இயேசுவிடம் வந்தார்கள். இருவருமே இயேசுவின் வார்த்தையைக் கேட்டார்கள். ஒருவன் அதன்படி செய்தான். மற்றொருவன் செய்யவில்லை. இவருடைய வார்த்தைகளைக்கேட்டு அதன்படி செய்யாதவனை மணலின் மேல் கட்டப்பட்ட வீட்டிற்கு ஒப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. வெள்ளம் வந்து அந்த வீட்டின்மேல் மோதின உடனே அது விழுந்தது என்பது ஆங்கிலத்திலே Immediate என்று சொல்லப்பட்டிருக்கிறது. வார்த்தைகளைக்கேட்டு அதன்படி செய்கிறதற்கு ஒப்பான கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீட்டை வெள்ளமானது அசைக்கக்கூட முடியவில்லை என்று ஆங்கில மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
வார்த்தைகளைக் கேட்டால் மாத்திரம் போதாது. அதை செயல்படுத்தவும் வேண்டும். செயல்படுத்தாவிட்டால் பிரச்சினை வரும்பொழுது உடனே விழுந்து விடுவோம். செயல்படுத்தி விட்டால் அசைக்கப்பட மாட்டோம்.
அறிக்கை:
அவருடைய வார்த்தைகளைக்கேட்டு அதன்படி செய்ய நான் தீர்மானிக்கிறேன். நான் கேட்கிறவன் மாத்திரம் அல்ல அதன்படி செய்கிறவனாயிருப்பேன். ஆமென்.
தொடர்புக்கு: போதகர் P.V.ஆரோன் – ஜி எம் சி செங்கல்பட்டு.
Cell: 9994209793 # Email: aronrhema@gmail.com