இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் சுயதொழில் ஊக்க பொருட்கள் – எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் வழங்கினார்
இராமநாதபுரம், ஜுலை, 27,
புதுமடம் ஊராட்சியில் இந்திய வளர்ச்சி இயக்கம் (AID INDIA) சார்பில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர், கைம்பெண்களுக்கு சுய தொழில் செய்ய அதற்கான ஊக்க பொருட்கள் ரூபாய் 3 லட்சம் செலவில் வழங்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்.
இந்திய வளர்ச்சி இயக்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு அவர்கள் சுய தொழில் செய்ய ஏதுவாக அதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுமடத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன் தலைமையில் நடந்த நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு 16 பேருக்கு தையல் மிஷின், 20 பேருக்கு பெட்டிக்கடை நடத்துவதற்கான பொருட்கள், 4 பேருக்கு இட்லி மற்றும் டீ கடை நடத்த தேவையான பொருட்கள், 19 பேருக்கு துணி விற்பனை செய்வதற்கான பொருட்கள் என சுமார் 60 நபர்களுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்கினார். இதில் மண்டபம் ஒன்றிய குழு தலைவர் சுப்புலெட்சுமி ஜீவானந்தம், மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் (கவுன்சிலர்) தௌபீக் அலி, இராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் பிரபாகரன், இராமநாதபுரம் தெற்கு நகர் திமுக பொறுப்பாளர் பிரவீன் தங்கம், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சோமசுந்தரம்,
வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன், இந்திய வளர்ச்சி இயக்க திட்ட மேலாளர்கள் பாஸ்கரன், சுகப்பிரியா, கனகா, குணசேகர காந்தி, மற்றும் களப்பணியாளர்கள் ஹரிதரணி, ரேவதி, ப்ரீத்தீஸ்வரி, இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் புதுமடம் தெற்கு நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் சீனி ஆவுல், சீனி முகைதீன், முஹம்மது முக்தார், காதர் உசேன், சம்சுர் ரஹ்மான் ஆகியோர் புதுமடம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளித்தனர்.

எம்.சோமசுந்தரம்
Attachments area