திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிப்பட்ட 57 வது வார்டு கோணக் கரை சுடுகாடு சாலை உயர்தர சாலையாக மேம்படுத்த கோரி சுற்றுச்சுவர், குடிநீர் வசதி செய்து தரக்கோரி, 55வது வார்டு பாளையம் பஜார் சாலை புதிய தார்சாலையாக அமைக்க கோரி. கருமண்டபம் சுடுகாட்டில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு சார்பில் தமிழக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர்.கே.என்.நேருவை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஏ.கே.திராவிடமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் க.சுரேஷ்.,அண்ணாதுரை,சிவா. பகுதி குழு செயலாளர் முரளி,பொருளாளர் ரவிந்திரன்,கே.முருகன்,ஆனந்தன்,மாணவர் பெருமன்றம் இப்ராஹீம் உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்