இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி முழு வீச்சில் 54.58 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
திருச்சி
இந்தியாவில் 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்ட 19.68 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 ஆயிரத்து 937 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,22,25,513 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 417 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,31,642 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,11,924 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.46 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,81,947 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 54,58 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களிடம் 1.51 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கிறது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 56 கோடியே 81 லட்சத்து 14 ஆயிரத்து 630 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது. அதில், 54,22,75,723 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப் பட்டுள்ளது. தற்போது 2 கோடியே 89 லட்சத்து 47 ஆயிரத்து 890 தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன. மேலும், இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 17,43,114 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டதையடுத்து, மொத்தம் 54,58,57,108 (திங்கட்கிழமை காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளது.
18 வயது முதல் 44 வயதுடையோருக்கு முதல் தவணையாக 19,68,99,466 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,54,10,416 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
45 வயது முதல் 59 வயதுடையோருக்கு முதல் தவணையான 11,73,89,912 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 4,57,91,230 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 8,11,53,834 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
4,03,08,964 பேருக்கு 2-வது தவணை டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,03,50,751 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 81,00,615 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் 1,82,78,787 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,221,73,133 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.கே. ஷாகுல் ஹமீது