ஆர் எஸ் மங்கலம் பெரிய கண்மாய் கரையில் பனை விதைகள் நடும் விழா.
இராமநாதபுரம்,ஆக, 25,
இராஜசிங்கமங்கலத்தில் உள்ள பெரிய கண்மாய் கரை ஓரங்களில் பனை விதை நடும் பணியில் மக்கள் பாதை அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் கரை ஓரங்களில் பனை விதை விதைப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது
இந்நிகழ்வில் மக்கள் பாதை நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.சோமசுந்தரம்