ஆடுதுறையில் எம்.எம்.ஜே. சமுதாயக் கூடத்திற்குபேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், அடிக்கல் நாட்டினர்
திருச்சி,
ஆடுதுறையில் நோபிள் மனைன் குழுமம் தலைவர் அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது தாயார் ஹலிமா ரிஸ்வான் மதரஸா கட்டிடத்தை ஒயிட ஹவுஸ் குழுமம் தலைவர் அல்ஹாஜ் அப்துல் பாரி திறந்து வைத்தார். பின்னர் மதரஸா வளாகத்திலேயே எம்.எம்.ஜே. சமுதாயக் கூடத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் அடிக்கல் நாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையில் நோபிள் மனைன் குழுமம் தலைவர் அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது ஏற்பாட்டில் அவரது தாயார் பெயரில் ஹலிமா ரிஸ்வான் மதரஸா கட்டிடம் திறப்பு விழா மற்றும் எம்.எம்.ஜே. சமுதாயக் கூடம் அடிக்கல் நாட்டு விழா 10.09.2021 வெள்ளிக்கிழமை மாலை மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நோபிள் மனைன் குழுமம் தலைவரும், ஹலிமா குழுமம் தலைவருமுன அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது தலைமை வகித்தார். கூட்டத்தை ஜமாஅத்துல் உலமா சபை தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மவ்லவி அல்ஹாஜ் ஜபருல்லாஹ் பாஜில் மன்பயீ கிராஅத் ஒதி தொடங்கி வைத்தார்.விழாவுக்கு வந்த அனைவரையும் அல்மதார் அறக்கட்டளை செயலாளர் ஏ. பஜ்லூர் ரஹ்மான் வரவேற்று பேசினார்.

முபராக் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் ஹாஜி பி. முஹம்மது யாசின், அல்மதார் அறக்கட்டளை நிறுவன தலைவர் எம். தீன் முஹம்மது, அல்மதார் அறக்கட்டளை பொருளாளர் ஹாஜி எஸ். கமால் பாட்ஷா, சுல்தான், எம். ஷாஜகான், எஸ். நஜீர் ஒலி, எம். தாஜுதீன், எம்.சலாஹுதீன், எம். அன்வர் பாட்ஷா, எச்.நௌசாத் அலி, ஏ. முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் தனது தயார் பெயரில் ஹலிமா ரிஸ்வான் மதரஸா கட்டிடத்தை நோபிள் மனைன் குழுமம் தலைவரும், ஹலிமா குழுமம் தலைவருமுன அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது மதரஸாவுக்கு வஃக்ப் செய்து கொடுத்தார்.

விழாவில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவருமான எம். அப்துர் ரஹ்மான், தஞ்சாவூர் வடக்கு மதிமுக மாவட்ட செயலாளர் இரா. முருகன், ஆடுதுறை நகர தி.மு.க. செயலாளர் கோ.சி. இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், திருவிடைமருதூர் வட்டார மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு தவைவருமான ஆடுதுறை ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டு மஸ்ஜிதே முபராக் ஜமாஅத்தின் சார்பில் கட்டப்ப்ட இருக்கும் எம்.எம்.ஜே. சமுதாயக் கூடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசுகையில் : நோபிள் மனைன் குழுமம் தலைவரும், ஹலிமா குழுமம் தலைவருமுன அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது தனது தாயார் பெயரில் ஹலிமா ரிஸ்வான் மதரஸா கட்டிடத்தை கட்டி கொடுத்து பெண்களின் முன்னேற்றத்விற்கும்,முஸ்லிம் சமுதாயத்திற்கும் பல்வேறு சேவைகளை குறித்து விளக்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காஸிம் ராஜாஜி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ஜூல்பிஹார் அகமது, மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, திருச்சி அமீருதின், அப்துல் முத்தலிப், அய்மான் ஷர்புதீன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சர்புதீன், ஹாஜி முஹம்மது, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் உமர் ஜஹாங்கிர்,சித்திக் துரை, நத்தர்சா, வடக்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் உஸ்மான் அலி, வடக்கு மாவட்ட மாணவரணி தலைவர் அபுதாஹிர், வடக்கு மாணவரணி மாவட்ட செயலாளர் ஷபிக் அகமது, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாங்குடி நதீர், ஆடுதுறை பிரைமரி தலைவர் சலாஹுதீன், ரைசுல் இஸ்லாம், திப்பு சுல்தான் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், உலமாக்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மஸ்ஜிதே முபராக் பள்ளிவாசல் இமாம் மவ்லவி எஸ்.பி. முஹம்மது ரியாஸூதீன் மிஸ்புஹி சிறப்பு து ஆ ஒதினார். நிகழ்ச்சிகளை ஆவணியாபுரம் தி கிரசண்ட் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மஹபூப்ஜான் தொகுத்து வழங்கினார். இறுதியில் அல்மதார் அறக்கட்டளை நிர்வாகி எம். சலாஹுதீன் நன்றி கூறினார்.