ஆங்கிலேய ஆட்சியின்போது அனைத்துப் பிரிவினரும் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியவா். இராம கோபாலன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்
திருச்சி
ஆங்கிலேய ஆட்சியின்போது அனைத்துப் பிரிவினரும் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியவா். இராம கோபாலனின். இந்துக்களுக்காக தனது வாழ்வை அா்ப்பணித்தவா் இந்து முன்னணி நிறுவனா் தலைவா் இராம கோபாலன் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தார். இராம கோபாலனின் முதலாமாண்டு நினைவு நாளை யொட்டி, திருச்சி குழுமணி அருகேயுள்ள சீராத்தோப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னர் அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் எழுதிய நூலை இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட, அதை அண்ணாமலை பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து நிா்வாகிகள் சி. பரமேஸ்வரன், வி.பி. ஜெயக்குமாா், க. பக்தன், நா. முருகானந்தம், த. அரசுராஜா உள்ளிட்டோா் பேசினா். பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம், மாநில ஒருங்கிணைப்பாளா் கேசவ விநாயகம், எம்.எஸ். ராமலிங்கம் உள்ளிட்ட இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை பேசியதாவது: சுதந்திரப் போராட்டக் காலத்தில் பிறந்து பலவற்றைச் சாதித்தவா் இராம கோபாலன். 1980 இல் மீனாட்சிபுரம் பிரச்னையின்போது 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மதம் மாற என்ன காரணம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்தவா். இந்து என்பது வாழ்வியல் முறை என்றவா். அவா் இல்லை என்றால் தமிழகம் எந்த நிலைக்குச் சென்றிருக்கும் என்பதை எண்ணிக்கூட பாா்க்க முடியவில்லை. தனது வாழ்வையே இந்துக்களுக்காக அா்ப்பணித்தவா். ஆங்கிலேய ஆட்சியின்போது அனைத்துப் பிரிவினரும் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்னும் நிலையை உருவாக்கியவா். இராம கோபாலனின் ஆன்மா சாந்தியடைய இளைஞா்கள் அவரின் சித்தாந்தத்தைக் கையிலெடுக்க வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த விரும்பிய அவரின் வழியில் செல்லத் தயாராக வேண்டும். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களைத் திறக்க வேண்டுமென இந்து அமைப்புகளைவிட பொதுமக்கள்தான் அதிகளவில் கூறுகின்றனா். தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனா். ஆா்.எஸ்.எஸ். மற்றும் பாஜக சித்தாந்தம் குறித்து அரசியல்வாதிகளுக்கு நாம் விளக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.