மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்டு- 9 – இந்தியாவைப் பாதுகாப்போம் .
திருச்சி, ஆகஸ்ட்.04 –
தொமுச அகில இந்திய பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம். பி . தலைமையில், கூட்டமைப்பில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்ற தொமுச பேரவை ஆலோசனைக் கூட்டத்தின் முடிவின்படி திருச்சி மாவட்டம், தொ.மு.ச .பேரவை செயலாளர் ஆர்.எத்திராஜ் முன்னிலையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;-
வருகிற6 – ம் தேதி சத்திரம் பேருந்து நிலையம் , 7-ம் தேதி காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது மேலும்9-ம்தேதி தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10.30 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.
அதே நாளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, லால்குடி, முசிறி,துறையூர் மண்ணச் சநல்லூர், உள்ளிட்ட அனைத்து தாலுக்காவிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதில் அனைத்திலும் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்கங்களுடன் இனைந்து போராட்டத்தில் பங்கேற்பது. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தொ.மு.ச .மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், செயலாளர் ஜோசப் நெல்சன், பொருளாளர் ரவீந்திரன் மற்றும் சி.ஐடியூ ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ் , நடராஜா , ஐஎன்டியூசி சேசுராஜ், எச்.எம்.எஸ் ஜான்சன், ஏஐசிசிடியூ தேசிகன்,விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவ சூரியன் உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்