அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இ.யூ முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல்
திருச்சி,
அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் செய்தியில் கூறியதாவது :
அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தவைவருமான ஓ. பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணமுற்ற செய்தியை அதிர்ச்சியும் மிகவும் வேதனை அடைந்தேன். இனிய நண்பர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வளர்ச்சிக்கு மிகவும் ஊக்கமும் உறுதுணையாக இருந்து வந்தார்.
அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் அவரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும் அ.இ.அ.தி.மு.க.வினருக்கும் எனது சார்பிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திப்போம் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.