அரசாங்கம், சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் செயல்பாடுகள் உள்ளன என பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேச்சு
திருச்சி,
சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் அரசாங்கம் உயர்வாக மதிக்கக்கூடிய வகையில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துர் ரஹ்மான் செயல்பாடுகள் நிச்சயமாக இருக்கும் என்று நோபிள் மரைன்.சாகுல் ஹமீது சொன்ன உத்திரவாதத்தை நாம் எல்லோருமே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். அதேபோல் எனக்கும் அவர் மீது நம்பிக்மை இருக்கிறது சிறப்பு பணியாற்றுவார் அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வக்ஃப் வாரிய தலைவர் பாராட்டு விழாவில் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார்.
ஒருங்கிணைந்த (பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர்) வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு & கிஸ்வா மற்றும் ஹலிமா பவுண்டேஷன் சார்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும்,0வக்ஃப் வாரிய தலைவருமான எம். அப்துர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி 10.09.2021 (வெள்ளிக்கிழமை) கும்பகோணம் டி.எஸ்.மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ஒயிட் ஹவுஸ் குழுமம் தலைவர் அல்ஹாஜ் எம். அப்துல் பாரி தலைமை வகித்தார்.
விழாவில் கிஸ்வா சாசான தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ. முஹம்மது ஜியாவுதீன், பாபநாசம் வட்டார மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் அல்ஹாஜ் எம்.ஏ. யூசுப் அலி, கிஸ்வா தலைவர் அல்ஹாஜ் கே. ஜாகிர் உசேன், கும்பகோணம் வட்டார மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் ஜே. ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
தமிழக அரசின் தலைமை கொறடா முனைவர் கோவி. செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், நோபிள் மனைன் குழுமம் தலைவரும், ஹலிமா குழுமம் தலைவருமுன அல்ஹாஜ் எம். ஷாகுல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளரும், திருவிடைமருதூர் வட்டார ஜமாஅத் மஹல்லா கூட்டமைப்பு தலைவருமான ஆடுதுறை ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் தமிழ்நாடு வகஃப் வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட அப்துல் ரஹ்மான் நிர்வாகம் திறமையும், அவர் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது அவருடைய திறமையும், தற்போது கொடுத்துள்ள வக்ஃப் வாரியத்தை திறம்படவும் செயல்படுவார் என்பதையும் பாராட்டி பேசினார்கள்.
நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், ஒயிட் ஹவுஸ் குழும தலைவர் பாரி ஹாஜியார், நோபள் மரைன் குழும தலைவர் ஷாஹூல் ஹமீது, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு அரசு கொறடாவும் ஆன கோவி.செழியன் , கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் வக்ஃப் வாரிய தலைவர் அவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான எம். அப்துர் ரஹ்மான் ஏற்புரையில் பேசியதாவது : எனக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டதை சரியாகவுமா நீதியாகவும் நடப்பேன். இந்த பதவி என்பது பெரிய சுமை அது எனக்கு நன்றாக தெரியும். தலைவரை வைத்து மீண்டும் சொல்லுகிறேன் எந்த களங்கம் இல்லாமல் நான் பணியாற்றுவேன் என்று எல்லோரும் முன்பும் சொல்லுகிறேன். வகஃப் வாரியத்தில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் கலந்து கொண்டு பேசுகையில் ‘அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு பாராட்டு விழா என்று போட்டிருக்கிறீர்கள். உண்மையில் தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா என்று போட்டிருக்க வேண்டும். அவர் தான் இதற்கு மூல காரணம். தமிழக முதல்வர் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்த அப்துல் ரஹ்மானுக்கு வக்பு வாரிய தலைவர் பொறுப்பினை மனமுவந்து அளித்து சிறந்த நம்பிக்கையும் கொண்டு பாராட்டு தெரிவித்து நமக்கு வழிகாட்டி இருக்கிறார். ஆகவே அவருக்கு பாராட்டு தெரிவிப்பது மிக முக்கியமானது. அதுதான் சிறந்தது. அந்த பாராட்டுக்கு வலிமை சேர்ப்பது போல் அந்த கட்சியை சார்ந்த எம்பிகள், எமஎல்ஏக்கள், கொறடாக்கள் இங்கே வந்து மிக அற்புதமாக உறையாற்றி விடைபெற்று சென்றிருக்கிறார்கள். அந்தக் காலத்திலே பேரிஞர் அண்ணா அவர்கள் சொல்லுவார்கள் நான் கைலி கட்டாத முஸ்லிம் என்று. இவர்களின் உரையை கேட்ட பிறகு அருமை சகோதரர்கள் நமது உடன் பிறவா சகோதரர்கள் என்று மட்டுமல்லாமல் அவர்கள் எல்லோருமே தொப்பி வைக்காத முஸ்லிம்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அவர்களின் உரைகள் இருந்தன. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம்.
இங்கு வக்பு போர்டு தலைவர் அவர்களை பாராட்டி அருமை நண்பர்கள் நிறைய பல செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். அதனை ஏற்ற அப்துல் ரஹ்மான் அவர்களும் பல்வேறு விளக்கங்களை இங்கு தந்திருக்கிறார்கள். நான் இங்கு கூறுவது மூன்றே விஷயம். ஒன்று வக்பு போர்டு தலைவர் பொறுப்பு என்பது அவரே சொன்ன மாதிரி மிகுந்த பொறுப்புள்ளது மட்டுமல்ல, மிகவும் சிரமமானது மட்டுமல்ல, மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு இடையில் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்று. இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உரிய முறையில் அவருடைய செயல்பாடுகள் நிச்சயாமாக இருக்கும் என்று அவருடைய பேச்சை முழுமையாக கேட்ட பிறகு, அந்த உத்திரவாதத்தை நாம் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவர் மீது நமக்கு நம்பிக்கை வரவில்லை என்று அர்த்தம் ஆகிவிடும். அவரை நாம் முழுமையாக நம்புகிறோம். அந்த பொறுப்பிற்கு உரியவராக சிறந்த முறையில் பணியாற்றி நாடும் ஏடும் போற்றக்கூடிய வகையில் சமுதாய மக்கள் பாராட்டக்கூடிய வகையில் அரசாங்கம் உயர்வாக மதிக்கக்கூடிய வகையில் அவருடைய செயல்பாடுகள் நிச்சயமாக இருக்கும் என்று சாகுல் ஹமீது ஹாஜியார் சொன்ன உத்திரவாதத்தை நாம் எல்லோருமே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். காரணம் நமக்கு அவர் மீது நமக்கு அவ்வளவு நம்பிக்மை இருக்கிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவருடைய செயல்பாடுகள் சிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடத்திலே நீங்கள் பிரார்த்திக்க வேண்டும் என்று உங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். 

இந்த நல்ல ஏற்பாட்டை செய்து அவருக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய வகையிலும், வாழ்த்துரை வழங்கிய பெருமக்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பணிக்கு இங்கே உள்ள அனைத்து ஜமாத்தினரும்,எல்லாவகையா ஒத்துழைப்புகளையும் தருவதற்கு உறுதி கொடுத்தது மாதிரி உங்களது உறுதிப்பாடு இங்கு இருந்தது. அதற்காகவும் நான் நன்றி செலுத்தி எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா விதமான அருளையும் புரிந்து தனது செயல்பாட்டில் வெற்றிகரமாக செயல்பட, வருங்காரத்திலே ஒரு நல்ல வரலாற்றை படைக்க, தமிழ்நாட்டிலே இதுவரை இப்படிப்பட்ட ஒரு வக்பு வாரியத் தலைவர் இதுவரை வந்ததுமில்லை இனி வரப்போவதும் இல்லை என்ற அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருக்கும், இருக்க வேண்டும். அதற்கு வல்ல இறைவனிடம் நானும் உங்களோடு துஆ செய்து விடைபெறுகிறேன் என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்கள் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் பேசினார்.
பாராட்டு விழாவில் திருச்சி அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி ரூஹூல் ஹக் ரஷாதி, வழக்கறிஞர் அப்துல் சுபுஹான், ஆவூர் அன்சாரி, அஹமது தம்பி ஹாஜியார், நீடூர் சாதிக், குறிஞ்சி பிர்தௌஸ் கான், வழக்கறிஞர் அன்சர் அலி, ராஜகிரி சாதிக்பாட்ஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் காஸிம் ராஜாஜி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ஜூல்பிஹார் அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிம்லா முஹம்மது நஜீப், மாநில எம்.எஸ்.எப். பொதுச்செயலாளர் அன்சர் அலி, திருச்சி ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, திருச்சி அமீருதின், அப்துல் முத்தலிப், அய்மான் ஷர்புதீன், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் சர்புதீன், ஹாஜி முஹம்மது, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நூருல்லா, புதுச்சேரி மாநில முதன்மை துணைத் தலைவர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் உமர் ஜஹாங்கிர்,சித்திக் துரை, நத்தர்சா, வடக்கு மாவட்ட இளைஞரணி பொருளாளர் உஸ்மான் அலி, வடக்கு மாவட்ட மாணவரணி தலைவர் அபுதாஹிர், வடக்கு மாணவரணி மாவட்ட செயலாளர் ஷபிக் அகமது, வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மாங்குடி நதீர், ஆடுதுறை பிரைமரி தலைவர் சலாஹுதீன், ரைசுல் இஸ்லாம், திப்பு சுல்தான் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள், உலமாக்கள், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட , நகர நிர்வாகிகள், ஒருங்கிணைந்த பாபநாசம் , கும்பகோணம் , திருவிடைமருதூர் வட்டாரத்தை சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மஹல்லாவை சேர்நத 24 ஜமாஅத் நிர்வாகிகள், கிஸ்வா அமைப்பின் நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள், ஜமாஅத்தார்கள் திரளாக பங்கேற்றனர்.