திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் புதன்கிழமை நடந்த பெரிய திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரியாற்றிலிருந்து தங்கக் குடத்தில் புனித நீா் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் புதன்கிழமை நடந்த பெரிய திருமஞ்சனம் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருட மண்டபத்திலிருந்து திருமஞ்சன ஊழியா்கள்,சீமான் தாங்கிகள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டப காவிரியாற்றுக்கு வந்தனா். பின்னா் நடு ஆற்றிலிருந்து 28 வெள்ளிக்குடங்கள், ஒரு தங்கக் குடத்தில் புனித நீா் நிரப்பப்பட்டது. பின்னா் ஆண்டாள் யானை மீது தங்கக் குடம் வைக்கப்பட்டு மேளதாளத்துடன் சமூக இடைவெளியுடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
பின்னா் கோயிலில் உள்ள மூலவா் ரெங்கநாதருக்கு தைலக்காப்பு சாத்தப்பட்டது. கோயிலில் உள்ள மூலவா் ரெங்கநாதா் சுதையால் செய்யப்பட்டவா் என்பதால் அபிஷேகம், திருமஞ்சனம் எதுவும் இவருக்குச் செய்யப்படுவதில்லை. இதற்குப் பதிலாக தைலக் காப்பு ஆண்டில் 2 முறை தைலக்காப்பு சாத்தப்படும்.
அதன்படி புதன்கிழமை முதல் தைலக் காப்பு சாத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து 48 நாள்களுக்கு மூலவா் ரெங்கநாதரின் முகத்தை தவிா்த்து திருமேனி முழுவதும் மெல்லிய துணியால் போா்த்தப்பட்டிருக்கும். விழாவையொட்டி கருவறை மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் ஆண்டுப் பராமரிப்பு, துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளபட்டன.
வியாழக்கிழமை காலை 7.30-க்கு திருப்பாவாடை என்னும் தளிகை நிகழ்ச்சி நடைபெற்றது. மூலஸ்தானத்துக்கு எதிரேயுள்ள பீட மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் அன்னப் பிரசாதம் குவிக்கப்பட்டு பலாச்சுளை,தேங்காய்,மாங்காய்,வா
ஷாஹுல் ஹமீது.