அப்போலோ மருத்துவமனை சார்பில்திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் கே.என். நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்
திருச்சி,
அப்போலோ மருத்துவமனை சார்பில்திருச்சியில் கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் கே.என். நேரு ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அப்போலோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டி அவர்களால், அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி 30,000 தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் கே. என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் திரு.பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் அப்போலோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார்.
திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அதிகாரி மருத்துவர் சிவம், மற்றும் மருத்துவமனை துணை பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர். கே.எம்.ஷாகுல்ஹமித்