அனைத்து வரியையும் முறையாக செலுத்தியவா்தான் வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு செயல்படுத்தும் வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி,
வணிகவரித்துறை வரி வசூல் செய்துக்கொடுத்தால்தான் சாலை போட முடியும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி தேசியக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்று பேசினார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இக்கூட்டத்தில், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது, சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன், பழநியாண்டி, உள்ளிட்ட 7 மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். வணிகவரி மற்றும் பதிவுத் துறைச் செயலா் பி.ஜோதி நிா்மலாசாமி, முதன்மைச் செயலா் மற்றும் வணிகவரித்துறை ஆணையா் எம்.ஏ.சித்திக், கூடுதல், இணை ஆணையா்கள், வணிகா்கள் பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்தாலோசனை செய்தார். இக்கூட்டத்தில் வணிகர்கள் , அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறை சார்ந்த செயலர்கள் பங்கேற்றனர். நேர்மையான வணிகர்களுக்கு உற்ற நண்பராக வணிக வரித்துறை இருக்கும் என வணிகவரித்துறை முதன்மை செயலரும் ஆணையருமான சித்திக் பேசினார்.
இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த புதுப்பிக்கப்பட்ட திருத்த நூல் வெளியிடப்பட்டது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெற்றுக்கொண்டார். பின்பு கே.என்.நேரு பேசியது: தேசியக் கல்லூரியில் நான் படிக்கவந்த போது எனக்கு படிக்க இடக்கொடுக்க மறுத்து விட்டார்கள். இதே கல்லூரியில் இன்று எனக்கு பேச வாய்ப்புக்கொடுத்த அமைச்சர் மூர்த்திக்கு நன்றி. பத்திரப் பதிவுத்துறை நம்பிகைக்கு உரிய துறையாக மாறியிருக்கிறது.
ஒருமுனை வரி விதிப்பு வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் மனை வணிகம், வாகன பதிவு வாயிலாக பெரிய அளவில் அரசுக்கு வரி கிடைத்தது. அதிக அளவு வரி செலுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வணிகவரித் துறை வரி வசூல் செய்துக்கொடுத்தால்தால் நாங்கள் சாலை போட முடியும் என்றார்.
வணிகர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் பேசுகையில்: ஜிஎஸ்டி சர்வர் பல நேரம் செயல் படுவதில்லை. அச்சமயம் கணக்கை சமர்ப்பிக்காத வணிகர்களுக்கு அபராதம், அபராதத்திற்கு வட்டி என கந்து வட்டிக்காரர்களை போல அரசு செயல்படுவதை கைவிட வேண்டும் என வணிகர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் கே.என்.நேரு, நீங்கள் அனைத்து வரியையும் முறையாக செலுத்தியவா்தான். வணிகா்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு செயல்படுத்தும் என்றாா். கே.எம். ஷாகுல்ஹமித்