அச்சிறுப்பாக்கம் அருகே போலி மதுபானம் தயாரித்த இருவர் கைது. இருவர் தப்பி ஓட்டம். போலிஸ் தேடுகிறது
மதுராந்தகம் மே.27
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு கிடைத்த பொதுமக்கள் கொடுத்த இரகசிய தகவலின் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுபடி அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன், தலைமை காவலர்கள் சுதாமணி, சபரிபிரியன், செல்வமணி, ஆகியோர் கொண்ட குழுவினர் உத்தமநல்லூர் கிராமத்தில் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் வீட்டுக்கு பின்புறம் 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 52 பிளாஸ்டிக் பாட்டிலில் போலி மதுபானங்கள் இருந்தது. மேலும் போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படும் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், போலி ஸ்டிக்கர்கள்,போலி ஹாலோகிராம் மற்றும் பாட்டில் அடைக்கும் இயந்திரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும், வீட்டிலிருந்து ரொக்க பணம் ரூபாய் 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராணி (வயது 40), ரம்யா (வயது 20) ஆகியோரை கைது செய்தனர். மேலும், போலி மதுபானம் தயாரிப்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புதுச்சேரியிலிருந்து எரிசாராயம் வாங்கி வந்து அதில் கலர் எசன்ஸ் ஊற்றி ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் அடைத்து விற்பதாகவும் ஒரு லிட்டர் ரூபாய் 2 ஆயிரத்துக்கு விற்பதாகவும் கூறினார்கள். மேலும், போலி மதுபானம் தயாரிப்பதற்கு காரணமாக திண்டிவனம் தாலுகா, எஸ்.கடூவூர் கிராமத்தைச் சேர்ந்த துரை(வயது 30)ராணியின் தம்பி கண்ணன் (வயது 19) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பிடித்து வரப்பட்ட ராணி ரம்யா ஆகிய இருவரையும் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ராஜசேகர்