அச்சிறுபாக்கத்தில் சமூக சேவகருக்கு வலைதளங்களில் குவியும் பாராட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கம் சமூக சேவகர் கலங்கரை காசிக்கு வலைதளங்களில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் அடுத்த அச்சிறுபாக்கத்தில் வசித்து வருபவர் சமூகசேவகர் கலங்கரை காசி இவர் கடந்த நிவர்புயல் மற்றும் கொரோனா பேரிடர் ஊரடங்கு நேரங்களில் மாற்றுத்திறனாளி முதியவர்கள் நரிக்குறவர்கள் வீடற்ற ஏழைகள் ஆகியோருக்கு அரிசி மளிகை உதவித்தொகை போன்றவை வழங்கியுள்ளார்.
நேற்று சென்னையிலிருந்து செஞ்சி அடுத்த களத்தம்பட்டு பகுதியை சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் செஞ்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அச்சிறுபாக்கம் பகுதியை கடக்கும் போது அவர் தன் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த கைபையில் பாஸ்போர்ட், விசா, ஆதார், பேன்கார்டு, வெளிநாட்டு டாலர்கள், மற்றும் பணம், ஆகியவை தவறிக் கீழே விழுந்துள்ளது.
இதனை அவ்வழியே சென்ற சமூக சேவகர் கலங்கரை காசி என்பவர் பையை எடுத்து வைத்து அந்த பையிலிருந்த ஒரு குறிப்பிட்ட டைரியில் தொலைபேசி எண்ணை எடுத்து தகுந்த நபருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் வந்த வேலு அவர் தன் ஆவணங்களை வாங்கிக்கொண்டு அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும் அச்சிறுபாக்கம் சமூக சேவகர் கலங்கரை காசிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இராசசேகர்