மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத் திட்டங்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
திருச்சி
நவல்பட்டு ஊராட்சி பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள். திருவெரும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி பகுதிகளில் அப்துல் கலாம் தெரு பகுதியில் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் துப்பாக்கி தொழிற்சாலை,மற்றும் ,ஒ.எப்.டியைஒட்டிய பகுதிகளில் உள்ள நீரானது கட்டளை வாய்க்கால் வழியாக வழிந்து வெளியேறும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கட்டலை வாய்க்காலில் உள்ள வடிகாலானது நீர் வெளியேற முடியாமல் நேற்று அப்துல்கலாம் நகர் பகுதியில் புகுந்துள்ளது . மேலும் தகவல் அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரடியாக வந்து இதனை பார்வையிட்டதுடன் இதற்கு உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகரன் மாவட்ட குழு துணை தலைவர் கருணாநிதி ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா கோவிந்தராஜன் கூட்டமைப்புத் தலைவர் நவல்பட்டு தலைவர் ஜேம்ஸ் உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என ஏராளமான உடனிருந்தனர் மேலும் இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மற்றும் திருச்சி மாவட்டம் சூரியூர் கும்பக்குடி பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீரான உப்பாற்றை பள்ளி கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டார்
பின்னர் திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஞாயிற்றுக்கிழமை செய்தியாளரிடம் கூறியதாவது : ஏற்கெனவே பள்ளி மாணவா்களுக்கு பாடத் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. தற்போது மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில், இனியும் பாடங்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை குறைந்த பிறகு கூடுதல் வகுப்புகள் நடத்தி, பாடங்கள் முடிக்கப்படும். தனியாா் பள்ளிகளுக்கு 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கப்படும் வழக்கமான நடைமுறையே தொடரும்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவெறும்பூா் பகுதியில் ஆய்வு செய்தபோது விவசாயி ஒருவரை அவமரியாதையாக பேசியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவா், நான் மக்கள் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அந்த விவசாயி தன்னுடைய வயலை தனியே வந்து பாருங்கள் எனக் கூறிக்கொண்டே இருந்தாா். அதனால்தான் நான் அவ்வாறு பேசினேன். அது வருந்தத்தக்கது இவ்வாறு அவர் கூறினார்.